» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)



தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் 1,000ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 27-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, மறுநாள் (ஜூலை-28) விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory