» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு எச்சரிக்கை!
ஞாயிறு 20, ஜூலை 2025 12:39:54 PM (IST)
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடகத்திற்கும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரண வழக்கு: வேறு விசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவு!
சனி 19, ஜூலை 2025 9:15:54 PM (IST)

மாணவிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சனி 19, ஜூலை 2025 5:34:31 PM (IST)

பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சனி 19, ஜூலை 2025 5:29:48 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சனி 19, ஜூலை 2025 12:48:22 PM (IST)
