» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 11, செப்டம்பர் 2025 4:31:50 PM (IST)
தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபி-யாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை. டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)
