» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால் பரிதாபம்!!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:37:50 AM (IST)
சென்னை திருவேற்காடு அருகே கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். வேலைக்கு சென்ற பெற்றோர், வீட்டில் மகன்களை தனியாக விட்டுச்சென்றபோது இந்த சோகம் நேர்ந்துவிட்டது.
சென்னை திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி என்ற தமிழரசு (வயது 32). இவர், ஆன்லைனில் உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (26). அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரியாஸ் (5), ரிஸ்வான் (3) என 2 மகன்கள் இருந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களது மகன்கள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். நேற்று மாலை சகோதரர்கள் இருவரும் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள், வீட்டின் அருகே உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தின் கரைக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், குளத்தில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒரே நேரத்தில் தங்களது 2 மகன்களையும் பறிகொடுத்த பெற்றோர், மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்போது மகன்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு செல்வது வழக்கம். சில நேரங்களில் அங்கன்வாடி மையத்தில் விட்டுச்செல்வார்கள். மாலையில் வசந்தி வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது பிள்ளைகளை அழைத்து வருவதுமாக இருந்துள்ளனர்.
ஆனால் நேற்று சகோதரர்கள் இருவரும் அங்கன்வாடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். அவர்களது பெற்றோர், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் வெளியே வந்து விளையாடிய சகோதரர்கள் இருவரும் குளத்தில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:27:24 PM (IST)

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)




