» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி: என்ஆர் தனபாலன் பேட்டி
திங்கள் 10, நவம்பர் 2025 5:04:54 PM (IST)
அதிமுக - பாஜக கூட்டணியில் நடிகர் விஜய் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்ஆர் தனபாலன் கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் கஞ்சா போதை கும்பலால் அந்த கிராமத்தில் வசித்து வந்த இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜாதி மோதலாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா போதை கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மதுபான விற்பனை மூலம் நாற்பதாயிரம் கோடி 50 ஆயிரம் கோடி வருமானம் வருவதால் இதற்கு அனுமதி மறுக்கிறார்கள் அனைவரும் குடித்து சாக வேண்டுமென நினைக்கிறது ஆனால் கள் குடித்து உயிருடன் வாழ நினைப்பது கிடையாது.
தமிழகத்தில் 10 வயது குழந்தை முதல் 60 வயது மூதாட்டி வரை வெளியே செல்ல முடியவில்லை பாலியல் தொல்லைகள் அதிக அளவில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கஞ்சா போதை இதை அரசாங்கம் நினைத்தால் கண்டிப்பாக தடுக்க முடியும். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என முதல்வர் கூறுகிறார் போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என கூறி வருகிறார். ஆனால் செயல்பாடுகள் ஒன்றும் இல்லை. பல இடங்களில் கஞ்சா கைப்பற்றப்படுகிறது
இப்போது தாய்லாந்தில் இருந்து மலேசியாவில் இருந்து உயர்ரக கஞ்சாக்கள் வருகிறது. அதிகமாகிக் கொண்டுதான் உள்ளது இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும். நான்கு சவரன் நகைக்காக பெண்ணை கொலை செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது. பெண்கள் நகையை அணிந்து செல்ல முடியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
தமிழகம் அமைதி பூங்கா என்ற சூழ்நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் உள்ளது. அனைத்து சினிமாத்துறை உள்ளிட்ட துறைகளிலும் குடும்பத்தின் கையே ஓங்கி உள்ளது. தமிழக மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர்.
புதிதாக வந்துள்ள விஜய் வரும்பொழுது முதல்வர் கனவுடன் வந்துள்ளார். தன்னை எம்ஜிஆர், என்டிஆர் ஆக நினைத்துக் கொண்டு இருக்கிறார். அதன் பின்பு வந்த நடிகர்கள் எவ்வளவு பிரச்சனையை சந்தித்தார்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதை உணர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வர வேண்டும்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூட கூறியுள்ளார், எனவே விஜய் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், இன்று இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் மற்றும் மக்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். எனவே விஜய் காட்டாற்று வெள்ளம் போல் இல்லாமல் நீரோடை போல் பாய வேண்டும். எனவே அதிமுக பிஜேபி கூட்டணியில் நடிகர் விஜய் இணைய வேண்டும் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)

பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.241 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கியது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:20:17 PM (IST)

ராகுல் அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு: பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு கருத்து!
வெள்ளி 14, நவம்பர் 2025 4:07:32 PM (IST)

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்: வழக்கு பதியாதது ஏன்? - அன்புமணி கேள்வி
வெள்ளி 14, நவம்பர் 2025 12:55:44 PM (IST)

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 14, நவம்பர் 2025 11:40:29 AM (IST)

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவ.16-ல் தவெக ஆர்ப்பாட்டம்: விஜய் பங்கேற்க முடிவு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:13:56 AM (IST)





DjibutiNov 10, 2025 - 06:13:21 PM | Posted IP 104.2*****