» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாம்பரம்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:49:52 AM (IST)
தாம்பரம்-குருவாயூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ம் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16328) 23-ம்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12695) வருகிற 21-ம் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதே வழித்தடத்தில் 25-ம்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12696) வருகிற 22-ம் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16127) 25-ம் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)

பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.241 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கியது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:20:17 PM (IST)

ராகுல் அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு: பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு கருத்து!
வெள்ளி 14, நவம்பர் 2025 4:07:32 PM (IST)

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்: வழக்கு பதியாதது ஏன்? - அன்புமணி கேள்வி
வெள்ளி 14, நவம்பர் 2025 12:55:44 PM (IST)

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 14, நவம்பர் 2025 11:40:29 AM (IST)

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவ.16-ல் தவெக ஆர்ப்பாட்டம்: விஜய் பங்கேற்க முடிவு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:13:56 AM (IST)




