» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்

வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)



பரோடா கிசான் பக்வாடா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நலனுக்காக பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் "பரோடா கிசான் பக்வாடா" விழிப்புணர்வு நிகழ்ச்சி இரையுமன்துறையில் உள்ள செயிண்ட் பார்பரா சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, பேசுகையில்பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. பொதுத்துறை வங்கியினை அணுகி குறைந்த வட்டியில் மீனவர்கள் கடன் பெற வேண்டும். மேலும் விவசாய கடன் அட்டை (KISAN CREDIT CARD) மூலமாக கடனுதவி திட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு கடன் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்திடலாம்.

மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மீன்பிடி முறையினை ஊக்குவித்திட தேவையான நிதியினை கடனுதவியாக பெறுதல், மீனவர்களுக்கு அரசங்கத்தால் வழங்கப்படும் நிதி உதவி திட்டங்கள், சேமிப்பு பற்றிய அவசியங்கள் குறித்தும், மானியம் வழங்க கூடிய வங்கி கடன் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் கடன்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பேங்க் ஆப் பரோடா மதுரை மண்டல முதன்மை மேலாளர் பிரகாஷ், கன்னியாகுமரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கொ.து.கோபிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.செல்வராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜெ.வை.அஜித் ஸ்டாலின், தேங்காப்பட்டணம் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை மேலாளர் சி.ரூத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory