» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)
தேங்காப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் காஞ்சிரவிளையை சேர்ந்த பிந்து (வயது 46) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் மண்டல மேலாளரான அருமனையை சேர்ந்த ஜெகன் டார்வின் (35) என்பவர் அந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிளை மேலாளர் பிந்து, நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சத்து 8 ஆயிரத்து 938-ஐ கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மண்டல மேலாளர் ஜெகன் டார்வின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்: வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:08:31 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:55:28 PM (IST)

பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் வழக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:53:41 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:47:53 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)

கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது: முதல்வர் மீது இபிஎஸ் தாக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:20:59 PM (IST)




