» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிடுவது வேடிக்கை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:51:48 AM (IST)

எம்ஜிஆரின் கொள்கை வேறு, விஜய்யின் வழியும், கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்வதற் காகவும், உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காகவும் மட்டுமே ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார்.

அரசின் திட்டங்களுக்கு திமுக போல பல்வேறு பெயர்களை நாங்கள் வைக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு ‘மக்கள் மன்றம்’ என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மத்திய அரசை குறை சொல்வதே வேலையாக உள்ளது.

செங்கோட்டையன் தவெக-வில் இணைவதற்கு முன்பாக சேகர் பாபுவை சந்தித்துள்ளார். ஆனால், பாஜக பின்னணி உள்ளது என்று திமுக-வினர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள செங்கோட்டையன், எம்ஜிஆர் வழியில் விஜய் செயல்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. எம்ஜிஆரின் கொள்கை வேறு, விஜய்யின் வழியும், கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory