» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல்முறை: டெல்லியை வீழ்த்தி ஜம்மு - காஷ்மீர் அணி சாதனை!

செவ்வாய் 11, நவம்பர் 2025 5:06:45 PM (IST)

ரஞ்சி கோப்பை தொடரில் முதல்முறையாக டெல்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது. 

இந்திய உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை டெல்லி அணி தனது சொந்த மண்ணில் ஜம்மு காஷ்மீர் உடன் மோதத் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 211க்கு ஆல் அவுட்டாக, ஜம்மு - காஷ்மீர் அணி 310 ரன்கள் குவித்தது.

அணியின் கேப்டன் டோக்ரா சதம் அடித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்ட்ன் ஆயுஸ் பதோனி 72 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய ஜம்மு காஷ்மீரின் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் 133 ரன்கள் எடுத்து அசத்தினார்.

43.3 ஓவர்களில் மூன்றாவது நாளில் 179/3 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஜம்மு காஷ்மீரின் ஆகிப் நபி தார் தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம், ரஞ்சி கோப்பை வரலாற்றில் டெல்லியை முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் வென்று வரலாறு படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory