குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு சங்கத்தில் தனது வீட்டு பத்திரத்தை வைத்து அதே பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவர் கடன் வாங்கிய நிலையில் தனது கடனை அடைத்து பத்திரத்தை வாங்க சென்ற நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கொடுக்கப்பட்ட வீட்டு பத்திரம் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பத்திரத்தை திருப்பி தருமாறு கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்திற்குள் தனது கும்படுத்துடன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். மேலும் அவர் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

