நெல்லை ஜங்ஷன் இரயில் நிலையத்திற்கு இன்று காலை செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி வந்த பாசஞ்சர் (56774) ரயிலில், லக்கேஜ் பெட்டியில் பயணித்த 10 க்கும் மேற்பட்ட பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்தனர்.
ரயில் லக்கேஜ் பெட்டியில் (Luggage / Parcel Van / Brake Van) மனிதர்கள் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்; பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் இதுபோன்று லக்கேஜ் பெட்டியில் பயணிக்க வேண்டாம். மீறினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

