உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 250 'ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்' (Junior பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், கணினியில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ. 1,500 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 28.10.2026 ஆகும். இது குறித்த கூடுதல் விபரங்களை sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

