தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பல்வேறு திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள வணிகமனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி (E-Tender) மற்றும் மின்னணு ஏலம் (E-Auction) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கீழநத்தம் பகுதி-I, பாளையங்கோட்டை பகுதி-I & II, தென்காசி, வல்லன்குமாரன்விளை, வி.எம்.சத்திரம் நிலை-II, குலவணிகர்புரம் TNUDP, சங்கரப்பேரி TNUDP, மீளவிட்டான், நாரணம்மாள்புரம் திட்டப்பகுதி-1 மற்றும் நாரணம்மாள்புரம் பகுதி-II ஆகிய இடங்களில் காலியாக உள்ள 55 வணிகமனைகளுக்கு இணையதளம் வாயிலாக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வணிகமனைகளுக்கான மின்னணு ஏலத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 24-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் வசதிக்காக இக் காலக்கெடு அக்டோபர் 09, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம் மின்னணு ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnhb.tn.gov.in மற்றும் https://tntenders.gov.in ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்குத் திருநெல்வேலி அன்பு நகர், காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருநெல்வேலி வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் திருநெல்வேலி வீட்டுவசதி பிரிவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.