தூத்துக்குடி தாளமுத்துநகர் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சேகர் (45). இவர் தனது மகள் சுதா வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். நேற்று வீட்டின் அருகில் உள்ள கோயில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.