தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, அருண்குமார், பழனி, பிரபு, அருணாதேவி, குபேர் இளம்பரிதி, டினோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.