தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தியுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றின் மூலமாகத் தங்களது நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் (Download) செய்து அச்சிட்டுக் கொள்ளலாம் எனத் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

