மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு கீழ்காணும் விருதுகள் 2026 டிசம்பர் -03 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளன.

தகுதிகள்

1.சிறந்த பணியாளர் சுயதொழில் புரிபவர்

1.கை, கால் பாதிக்கப்பட்டோர் (LD) அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் (LC)

2.பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர் (VI)

3.செவித்திறன் பாதிக்கபபட்டோர் (HI)

4.அறிவுசார் குறைபாடுடையோர் (ID)

5.பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு (SPLaD)

6.Developmental Disorder (புறவுலக சிந்தனையற்றோர் (ASD) குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு (SLD)

7.மனநோய் (MI)

8.Disability Caused due to blodd Disorder இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு (HS) இரத்த அழிவுச்சோகை (RH) அரிவாளனு இரத்தச்சோகை (SCD)

9.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு திசு பன்முகக் கடினமாதல் (MS) நடுக்கு வாதம் (PD)

10.பல்வகை குறைபாடு (Multiple Disabilities (MD)

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (10 விருதுகள்)

2.ஹெலன் கெல்லர் விருது - பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் (தலா ஒரு விருது)

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (2 விருதுகள்)

3.சிறந்த ஆசிரியர் - (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்)

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

4.சிறந்த சமூகப் பணியாளர்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

5.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

6.மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

7.ஹெலன் கெல்லர் விருது – ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

8.ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (1 விருதுகள்)

9.மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (2 விருதுகள்)

10.பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்

10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் - (2 விருதுகள்)

மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https:awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதார்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படும் எனத் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.