தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொதுக் கொள்கை அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படைத் தட்டச்சுத் திறன் அவசியம்.
வயது மற்றும் அனுபவம்: விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொடர்புடைய பணியில் குறைந்தது ஓராண்டு அனுபவம், குறிப்பாக அரசு அலுவலக அனுபவம், தரவு மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு மற்றும் MS Word, Excel, PowerPoint திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதியம் மற்றும் பணிக்காலம்: மாதம் ரூ.22,000; ஒப்பந்தப் பணிக்காலம் 19 மாதங்கள். பணியிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட வன அலுவலகம் ஆகும். பணியுடன் தொடர்புடைய அலுவல் பயணங்களுக்கான Travel Head, அரசு விதிமுறைகளின் படி வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பங்களின் தகுதிப் பரிசீலனை, நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம் (Resume/CV), கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்: dfotuty@gmail.com, cmgfp.tut@gmail.com மின்னஞ்சல் தலைப்பு: Application for Technical Assistant – District Climate Change Mission, Thoothukudi. நேரடியாகவும், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2026
மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in-ஐப் பார்வையிடவும். மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி – 628101 / மாவட்ட வன அலுவலகம், தூத்துக்குடி நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

