திருநெல்வேலி மவாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமை விதிகள் 2018 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி மாநில ஆலோசனை குழு உறுப்பினருக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் நவம்பர் 13.11.2026 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்க தொடர்பான விவரங்கள் மற்றும் படிவங்கள் https://www.scd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விண்ணப்பத்தினை இரண்டு நகல்களை திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.