புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் நவதிருப்பதி கோவில்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த 4 சிறப்பு பேருந்துகளில் மொத்தம் 157 பக்தர்கள் நவதிருப்பதி கோவில்களுக்கு பயணம் செய்தனர். சிறப்பு பேருந்து இயக்க நிகழ்ச்சியில் துணை மேலாளர் (வணிகம்), துணை மேலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

