குமரி, நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போக்ஸோ, பலாத்காரம், கொலை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் த. உமா மற்றும் நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் தே. மெர்சி பாய்; கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய RAPE வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தர நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் பெ. வெங்கடேஸ்வரி;

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய கூட்டுக் கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் பா. பார்வதி; ஆகியோரை, இன்று (31.10.2026) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுத்தர நீதிமன்ற பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் க. செல்வி; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் வே. விஜயலட்சுமி; மற்றும் நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் ஜே. ஸ்டெல்லா மேரி;

DiGcert2.jpg

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தர நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் இரா. அமுதா; திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய கூட்டுக் கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் க.முருகன்; ஆகியோரை, இன்று (31.10.2026) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.