தமிழகத்தில் வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு நிலவரங்களை மேற்பார்வையிடவும் அனைத்து மாவட்டங்களுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்றங்களின் வழக்கு நிலவரங்களைத் தொடர்ந்து மேற்பார்வையிடவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வாரியான பொறுப்பு நீதிபதிகள் விவரம்: இந்த உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில்ற்கு நீதிபதிகள் தண்டபாணி மற்றும் கோவிந்தராஜன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நீதிபதிகள் ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சுமதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தென்காசி மாவட்டத்திற்கு நீதிபதி விக்டோரியா கவுரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.