அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Postmatric Scholarship Scheme) கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
I. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
II. பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை (ம) ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 2026-27 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
தகுதியுள்ள மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 21.10.2026 வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், தெரிவித்துள்ளார்.

