கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளரச்சி திட்டப்பணிகள், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணும் முகாம் இன்று (21.10.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, தெரிவிக்கையில்- மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மற்றும் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் இன்று திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பில் கொக்கோ சாகுபடி செய்யப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, இலாபம் குறித்து உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் கேட்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பொன்மனை நியாயவிலைக்கடை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைத்தாரருக்கு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் அளவு சரியான முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, பொதுமக்களுக்கு எடை போடும் முறைகள் மற்றும் இருப்பு பதிவேடுகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுமக்களுக்குத் தடையின்றி தரமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் எந்தவிதத் தடையோ சுணக்கமோ இருக்கக்கூடாது என்றும் பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் திருவட்டார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் யுனானி மருத்துவப் பிரிவு மற்றும் பொது மருத்துவப் பிரிவுகளுக்குச் சென்று, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அங்குள்ள மருந்துப்பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.

மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக வெளிநோயாளிகள் வருகைப் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுக்குத் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் மருத்துவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதோடு, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது துறைசார்ந்த அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு துறை சார்ந்த அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார்.

நடைபெற்ற நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டி.மாலதி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு சரவணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நக்கீரன், திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.