பணியிடங்கள் விவரம் (மொத்தம் 590):

செவிலியர் கண்காணிப்பாளர் (Nursing Superintendent): 365

பார்மாசிஸ்ட் (Pharmacist): 118

ஹெல்த் & மலேரியா ஆய்வாளர் (நிலை III): 43

ரேடியோகிராபர் / எக்ஸ்-ரே டெக்னிஷியன்: 25

ஆய்வக உதவியாளர் (நிலை II): 31

ஈசிஜி (ECG) டெக்னிஷியன்: 04

கண் பரிசோதகர் (Optometrist): 02

டயாலிசிஸ் டெக்னிஷியன்: 01

ஆடியோலாஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்: 01

கல்வித் தகுதி & வயது வரம்பு:

கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். நர்சிங் பணியிடங்களுக்கு DGNM / B.Sc Nursing படிப்புகளையும், பார்மாசிஸ்ட் பணியிடங்களுக்குப் பார்மசி (Pharmacy) படிப்புகளையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: நர்சிங் சூப்பிரண்டெண்ட் பணிக்கு 20 முதல் 40 வயதுக்குள்ளும், இதர பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பள விவரம் (மாதம்):

செவிலியர் கண்காணிப்பாளர்: ரூ.44,900/-

டயாலிசிஸ் / ஹெல்த் ஆய்வாளர் / ஆடியோலாஜிஸ்ட்: ரூ.35,400/-

பார்மாசிஸ்ட் / ரேடியோகிராபர்: ரூ.29,200/-

ஈசிஜி டெக்னிஷியன் / கண் பரிசோதகர்: ரூ.25,500/-

ஆய்வக உதவியாளர்: ரூ.21,700/-

தேர்வு முறை & விண்ணப்பிக்கும் முறை:

கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு (CBT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு ரூ.250.

கடைசி நாள்: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் rrbapply.gov.in என்ற இணையதளம் வழியாக வரும் அக்டோபர் 14, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.