தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில், புளியங்குளம் கிராமத்திற்கு முன்பாக அபாயகரமான சாலை வளைவு ஒன்று உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையோரத்தில் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த இரும்புத் தடுப்புக் கம்பிகள் திடீரென மாயமாகின. தற்போது அதே இடத்தில் மீண்டும் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த தடுப்புக் கம்பிகள் எதற்காக அகற்றப்பட்டன? அவை மாயமானதன் பின்னணி என்ன? அல்லது பழைய கம்பிகளை அகற்றிவிட்டுப் புதிதாக அமைப்பதன் நோக்கம் என்ன? என்பது குறித்து எவ்விதத் தெளிவான தகவலும் இல்லை.

RoadWork.jpg

இதனால் குழப்பமடைந்துள்ள அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும், "பொதுமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள் திடீரென அகற்றப்பட்டது ஏன்? தற்போது மீண்டும் அமைக்கப்படுவதன் பின்னணி என்ன? இந்த மர்ம முடிச்சுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய விளக்கமளித்து அவிழ்ப்பார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.