தூத்துக்குடியில் 17 வயது சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் ரஞ்சித் கண்ணன் என்ற ரஞ்சித் (24). இவர் கடந்த 2022-ம் ஆண்டு 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மாசாார்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு 22 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

