அகமதாபாத்தின் டானிலிம்டா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சைலேஷ் மனுபாய் பார்மர், சிங்கங்களைப் பாதிக்கும் நோய்கள், உயிரிழப்புகள் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு குஜராத் வனத்துறை அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த அதிர்ச்சி தரும் தரவுகள் வெளியாகியுள்ளன.
சிங்கங்களின் உயிரிழப்பிற்கு நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பு, ரத்த சோகை, இரைப்பை குடல் அழற்சி, மூளை அழற்சி மற்றும் செப்டிக் ஷாக் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணங்களாக வனத்துறை சார்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.
உயிரிழந்த 62 சிங்கங்களில் பெரும்பாலானவை குட்டிகள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கக் குட்டிகள்: 28 (மொத்த உயிரிழப்பில் 45.2%)
ஆண் சிங்கங்கள்: 17 (27.4%)
பெண் சிங்கங்கள்: 17 (27.4%)
எந்தக் குறிப்பிட்ட நோயால் எத்தனை சிங்கங்கள் இறந்தன என்ற தனித்தனி விவரங்களையோ, அல்லது முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதா என்ற தரவுகளையோ வனத்துறை தெளிவாக வெளியிடவில்லை. இருப்பினும், அரிதான ஆசிய சிங்கங்கள் இவ்வளவு பெருமளவில் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

