தமிழகத்தின் புதிய ஆளுநராக இராஜேந்திர விசுவநாத் ஆர்லேகர் இன்று சென்னை லோக் பவனில் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த இராஜேந்திர விசுவநாத் ஆர்லேகரை முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று அவர் இன்று தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்று தனது பணியைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், மற்றும் லோக் பவன் உயர் அதிகாரிகள் உடனிருந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

