தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (50). இவர் நேற்று காலை தனது ஸ்பெண்டர் பிளஸ் பைக்கை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து, இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பைக்கை திருடிச் சென்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.