தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புகழ்பெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன தினவிழா இன்று தூத்துக்குடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விழாவில், வங்கியின் நிர்வாகக் குழு மற்றும் உயரதிகாரிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.