தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தங்கைக்கும் துணை நிற்கும் அண்ணனாகவும், அவர்களின் குழந்தைகளுக்குத் தாய்மாமனாகவும் இருந்து, "தமிழ்நாடு எனது குடும்பம்" என்ற உணர்வோடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தினை, மதுரை இராசாசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராபர்ட் புரூஸ் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினர்.
இத் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் கடந்த 22.06.2026 முதல் 24.09.2026 வரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 1,936 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
வழங்கும் முறை மற்றும் கால அவகாசம்:
முந்தைய பிரசவங்கள்: தேர்வு செய்யப்பட்ட 1,936 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைகளில் தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.
புதிய பிரசவங்கள்: 25.09.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது 1 கிராம் தங்க மோதிரம் நேரடியாக வழங்கப்படும்.
அழைப்பிதழ் விநியோகம்: 22.06.2026 முதல் பிரசவித்த தாய்மார்களுக்குக் கிராம சுகாதாரச் செவிலியர்கள் மூலம் நேரில் அழைப்பிதழ்கள் வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே பயனாளிகள் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
இத் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்களைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
பாப்பாகுடி: மரு. பழனிகுமார் - 9600231107
நாங்குநேரி: மரு. பூர்ணிமாதேவி - 9551089988
சேரன்மகாதேவி: மரு. அஷ்ரப்அலி - 9952663995
பாளையங்கோட்டை: மரு. ஜஸ்டின் பொன்னையா - 9176683045
களக்காடு: மரு. தளபதி - 7708803411
இராதாபுரம்: மரு. அட்லின் - 9940724912
வள்ளியூர்: மரு. கோலப்பன் - 9865408994
அம்பாசமுத்திரம்: மரு. ஜெபிஷா - 9486782948
திருநெல்வேலி மாநகராட்சி: மரு. நிதின் ஸ்டெபி ஜோஸ் - 6374075012
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஆர். செல்வராஜன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. முரளிசங்கர், முக்கியப் பிரமுகர் மரிய ஜாண், மாநகர நகர் நல அலுவலர் பாலசுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பாலசுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

