தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நகைக்கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டு, நகைக் கடனுக்கான தொகையை கூடுதலாக கட்டுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தங்கத்தின் சந்தை விலை குறைவு காரணமாக, வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பும் குறைந்து வருகிறது. இதனால், வழங்கப்பட்ட கடன் தொகைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து, வாடிக்கையாளர்களை கூடுதல் தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும், 1 கிராமுக்கு ரூ.12,000/- வரை வழங்கிய நிலையில், தற்போது தங்க நகை 1 கிராமுக்கு ரூ.8,000-க்கும் குறைவாகவே கடன் தொகை வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் புதிதாக நகைக்கடன் பெற வருவோர் ஏமாற்றமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயரும் வரை இந்நிலை தொடரும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

