திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24.11.2026 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்குப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி கோட்டம்) சார்பில் 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் விவரம்:
திருவண்ணாமலை செல்ல வரும் 22.11.2026 மற்றும் 23.11.2026 ஆகிய நாட்களில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய முக்கியப் பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
திருவிழா முடிந்து பக்தர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, 24.11.2026 மற்றும் 25.11.2026 ஆகிய நாட்களில் திருவண்ணாமலையிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
திருவண்ணாமலைக்குக் குழுவாகச் செல்ல விரும்பும் பக்தர்களின் நலன் கருதி, ஒப்பந்த அடிப்படையில் (On Contract) பேருந்துகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை தேவைப்படுவோர் மாவட்ட வாரியாகக் கீழ்க்காணும் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
• திருநெல்வேலி மாவட்டம்: உதவி மேலாளர் (வணிகம்), திருநெல்வேலி மண்டலம் (94875 99053), உதவிப் பொறியாளர் (இயக்கம்), திருநெல்வேலி மண்டலம் (94890 52016).
• தென்காசி மாவட்டம்: உதவி மேலாளர் (வணிகம்), திருநெல்வேலி மண்டலம் (94875 99053), உதவிப் பொறியாளர் (இயக்கம்), திருநெல்வேலி மண்டலம் (94890 52016).
• தூத்துக்குடி மாவட்டம்: உதவி மேலாளர் (வணிகம்), தூத்துக்குடி மண்டலம் (94890 52015), கிளை மேலாளர், தூத்துக்குடி புறநகர் கிளை (94875 99063).
• கன்னியாகுமரி மாவட்டம்: உதவி மேலாளர் (வணிகம்), நாகர்கோவில் மண்டலம் (94875 99082), உதவிப் பொறியாளர் (இயக்கம்), நாகர்கோவில் மண்டலம் (94875 99083).
பக்தர்கள் இச்சிறப்புப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் க. செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

