தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி பீச்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 3 மோட்டார் பைக்கில் வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஒரு சாக்கு பையில் வைத்திருந்த 7 கிலோ கஞ்சா மற்றும் 6 அரிவாள், கத்தி, 3 செல்போன் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.
பின்னர், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வம் என்ற செல்வ சதீஷ்(25), லெவஞ்சிபுரம் முதல் தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சிவஞான மூர்த்தி (25), சிவந்தாகுளம் ரோடு 2வது தெருவை சேர்ந்த ஸ்டாலின் மகன் வினோத் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேர் மீதும் பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. இதனால் சரித்திரப்பதிவேட்டில் உள்ள குற்றவாளியாக இடம்பெற்றுள்ளர். பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

