தூத்துக்குடி நகர் கோட்டம், வடக்கு உபகோட்டம், பீச் ரோடு விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட 110/22 கேவி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, நாளை (திங்கள்கிழமை, நவம்பர் 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ் டவுன், தெற்கு காட்டன் ரோடு, காசுகடை பஜார், சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு மற்றும் விக்டோரியா தெரு.
மேலும், கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு, முனியசாமிபுரம், சி.ஜி.இ. காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் முடுக்கு காடு ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்துக்கொண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

