தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சாத்தான்குளம் பன்னம்பாறை விளக்கு – கக்கன் நகர் மழைநீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பினை அகற்றுவது குறித்தும், சுடலையாண்டவர் திருக்கோவில் அருகில் நீர்தேக்கம் அமைத்திட ஏற்படும் காலதாமதத்தை தடுத்து விரைந்து திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், நாலயிரமுடையார் குளத்தில் மீன்பிடிப்பு உரிமையை சங்கத்திற்கு வழங்குவது குறித்தும், நாலயிரமுடையார் குளத்திலிருந்து மறுகால் வாய்க்கால் மற்றும் திருவைக்குளம் குட்டை வடிகால்களை தூர்வாருவது குறித்தும்,
2025 -26 வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது குறித்தும், பெட்டைக்குளம், செம்மறிப்புதுக்குளம், நகளைகுளம், நொச்சிகுளம், சம்பருத்தாகுளம், குருந்தகுளம், சடையநேறிகுளம் ஆகிய குளங்களை தூர்வாருவது குறித்தும், சடையநேறி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி தருவது குறித்தும், கருமேனியாற்றை கரியாண்டில் மறித்து அணைக்கட்டி தண்ணீரை தேக்கி விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுப்பது தொடர்பாக,
கருமேனியாற்றில் சுப்பிரியார்புரம் ஓடை தடுப்பணை சரிசெய்வது குறித்தும், உடன்குடி பனங்கருப்பட்டி ஆய்வில் சுக்ரோஸ் கலந்திருப்பதாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்தும், கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி விவரங்கள் வழங்குவது குறித்தும்,
தாமிரபரணியிலிருந்து கழுகுமலை செல்லும் குடிநீர் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், விளை நிலங்களுக்கு மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி விளை நிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளுவது குறித்தும், விவசாயிகளின் நிலத்தை சீர்திருத்தி, விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பாகவும், கருமேனியாற்றில் மழையின் மூலம் கிடைக்கும் மழைநீர் மணப்பாடு பொழிமுகம் வரை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்தும்,
ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதியில் உள்ள தாமிரபரணி பாசன கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றி, பாசன நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்தும், திருவரங்கநேரி மணிமுத்தாறு கால்வாய் மடைகளை சரிசெய்து, பண்ணையப்பத்து குளத்தை தூர்வாருவது குறித்தும்,
திருவரங்கநேரி பகுதியில் உள்ள விவசாய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து தருவது குறித்தும், கடம்பாகுளம் மறுகால் 17 கி.மீ தூரம் வரை உள்ள ஒடையினை தூர்வாருதல் குறித்தும், தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தினை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அறிக்கை வழங்குவது குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை பணியாட்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்தும்,
வடகால் கால்வாயிலிருந்து மிகவும் மேடாக இருப்பதால் அதனை அகற்றி தண்ணீர் செல்லும் விதத்தில் அமைத்து தருவது குறித்தும், சாத்தான்குளம் வட்டம் பன்னம்பாறை கிராமத்தில் உள்ள கடைமடை குளங்களான கடம்பன் தோட்டம், பண்ணையாம்பத்து குளங்களுக்கு 3வது ரீச் மூலம் இந்த ஆண்டு தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்தும், சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் தரமான உரங்களை வழங்குவது குறித்தும்,
புதுக்குளம் கிராமத்தில் சொக்கலிங்கபுரம் ஊரில் அமைந்திருக்கும் கருமேனியாற்று படுகை தடுப்புகளையும், அணைகளையும் சரிசெய்வது குறித்தும், மணிமுத்தாறு பாசன கால்வாய்கள் மூலம் பெரும்பத்து குளம், ஆறுமுகநேரி குளம், உடையான்குளம், பன்னம்பாறைகுளம் ஆகிய குளங்களுக்கு ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், திருவைகுண்டம் கஸ்பாகுளம் பாசன கால்வாயினை தூர்வாருவது குறித்தும், கொடியன்குளம் முதல் அக்கநாயக்கன்பட்டி வரை செல்லும் பேருந்து வழிதடத்தினை நீட்டிப்பு செய்வது குறித்தும்,
புளியங்குளம், மேலசெக்காரகுடி, கீழநொச்சிகுளம், திருவரங்கநேரி வழியாக பேருந்துகளை இயக்குவது குறித்தும், ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிமெண்ட் தளம் அமைத்து தருவது குறித்தும், திருவரங்கநேரி விவசாயிகள் செல்லும் (மயான சாலை) பாதையினை சீரமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளார்கள்.
கோரிக்கையினை உடனடியாக பரீசிலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து விவசாயிகள் 151 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி)பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர், ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

