தூத்துக்குடி மாநகரின் பிரதான அடையாளமும் தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் போனஸ் தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொழிலாளர்களுக்குப் போனஸாக வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் ஆறுமுகநயினார், திமுக மாவட்டக் கழகப் பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, சுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.