தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கயத்தாறு தாலுகா, அய்யனார் ஊத்து அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பூல்பாண்டி (23). இவர் மனநலப் பிரச்சனை காரணமாகச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அவர் மனநலத்திற்கான மாத்திரைகளை உட்கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சுமார் 06.00 மணியளவில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கார் மூலமாகச் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அவரை உடனடியாகக் கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காகத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்துக் கயத்தாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

