கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்பை மதுரையில் அக்டோபர் 04ம் தேதி மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற சாம்சன் பால் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

மதுரையில் நடைபெற்ற நியூ வேர்ல்ட் கிளாசிக் (New World Classic) திறந்த நிலை மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், கன்னியாகுமரியைச் சேர்ந்த சாம்சன் பால் ஜே. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ட்ரெக்ஸ் ஃபிட்னஸ் கிளப் (D-rex Fitness Club) சார்பில் பங்கேற்ற அவர், ஜூனியர் ஆணழகன் பிரிவில் தங்கப் பதக்கம், ஆண்கள் பிசிக் பிரிவில் தங்கப் பதக்கம், ஜூனியர் ஆணழகன் பிரிவில் தங்கப் பதக்கம் என மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். மேலும், போட்டியின் உயரிய அங்கீகாரமான சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் (Champion of Champions) பட்டம் மற்றும் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்கள்.

மாநில அளவிலான இப்போட்டியில் ஒரே வீரராக நான்கு முக்கியப் பிரிவுகளில் தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பெருமை சேர்ந்துள்ளார். கடின உழைப்பு, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட இளைஞர்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதுடன், இதுபோன்று விளையாட்டுத்துறைகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். நிகழ்வில் பயிற்சியாளர் ராம் தர்ஷன் கலந்துகொண்டார்கள்.