தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணபதி என்பவரின் மனைவி அழகம்மாள் (38). இவர் கடன் தொல்லையால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அழகம்மாள் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

