தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் சங்கிலிப்பாண்டி (40). இவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருந்தது.

பொதுமக்களுக்கும் சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் காவல் துறை திட்டமிட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அளித்த பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜன், சங்கிலிப்பாண்டியைத் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் சங்கிலிப்பாண்டியை நேற்று (நவம்பர் 3) தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து, பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.