நாரைகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட எதிரியைத் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்குத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நாரைகிணறு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்வதில், சிறப்பு உதவி ஆய்வாளர் ச. செந்தில் ஆறுமுகம் மற்றும் தலைமைக் காவலர்கள் வெ. பாலமுருகன், சோ. காரி (எ) ராஜா ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.
இவர்களின் மெச்சத்தகுந்த பணியைப் பாராட்டும் வகையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று (18.11.2026) திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார். தொடர்ந்து, மூவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.

