தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சேரி தளவாய்புரம், கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் காசி ராஜா. இவரது மனைவி வசந்தா (31). கணவன்-மனைவி இடையே இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் கணவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த வசந்தா, ஊருக்கு அருகில் உள்ள கண்மாய்ப் பகுதிக்குச் சென்று அங்கு களைக்கொல்லி (விஷம்) மருந்தைக் குடித்துள்ளார்.

உயிருக்குப் போராடிய அவரை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.