தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (19), கூலித் தொழிலாளி. இவர் நேற்று (நவம்பர் 28) அப்பகுதியில் மதுபோதையில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு, பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கழுகுமலை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார், கண்ணனை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

