கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இவர், நடிகை மற்றும் தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி பல சொந்த தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, 'உயிர்', 'உலக்' என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் சினிமா மீதான தீவிர ஆர்வத்தால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது நயன்தாரா ஒரே நேரத்தில் தமிழ், இந்தி மற்றும் மலையாளத் திரையுலகின் 3 முன்னணி சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துப் புதிய சாதனை படைத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் 'மான்ஸ்டர்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கும் 'பாதயாத்திரை' திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஹாய்' மற்றும் 'டாக்ஸிக்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

