திருநெல்வேலியில் வெற்றி பயணப் பேருந்தில் பெண்களை ஏற்ற மறுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவில் திருநெல்வேலியில் இருந்து கடையம் நோக்கிச் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வழுக்கோடை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் நோக்கில் நின்றுகொண்டிருந்த பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பெண்களைப் பேருந்தில் ஏற்றாமல் சென்றது குறித்த புகார் எழுந்ததை அடுத்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பேருந்து ஓட்டுநர் சங்கர கிருஷ்ணன் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.