திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் டிஐஜி இரா.திருநாவுக்கரசு தலைமையில், நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் 248 மனுக்கள் பெறப்பட்டன.

திருநெல்வேலி சரக அலுவலகத்தில் இன்று (28-10-2026) புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா.திருநாவுக்கரசு, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெற்றார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன.