தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், பெரியதாழை மீன் இறங்குதளத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏல கூடத்தினை மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், தூத்துக்குடியிலிருந்து சுமார் 76 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெரியதாழை மீன்பிடி கிராமம் 1,102 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 10 மரக் கட்டுமரம் (OBM) மற்றும் 375 FRP படகுகள் (OBM) இம்மீன்பிடி இறங்கு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கிராம மக்கள் பெரும்பாலும் பாரம்பரிய மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மீன்பிடி தொழில் இவர்களின் முதன்மைத் தொழில் மற்றும் வாழ்வாதாரமும் ஆகும். இப்பகுதி மீனவ மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.80 இலட்சம் செலவில் பெரியதாழை மீன் இறங்குதளத்தில் வலை பின்னும் கூடத்தினை திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பெரியதாழை மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 1,102 குடும்பங்கள் பயன் அடைவார்கள்.

மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தங்கள் வலைகளை சுகாதாரன முறையில் சீர் செய்து கொள்கிறார்கள். இவ்வசதி மூலம் உற்பத்தித்திறன், வருவாய் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு கிராம மக்களுக்குக் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் ராம் சூர்யா மற்றும் துறை அலுவலர்கள் மீனவ குடும்பத்தினர் உட்பட பலர் உள்ளனர்.